இண்டிகோவின் 63 புதிய வழித்தட சேவைகள் விரைவில் துவக்கம்


பிரபல விமான சேவை நிறுவனமான இண்டிகோ, புதிதாக 63 வழித்தட சேவைகளை விரைவில் தொடங்க உள்ளதாக இன்று அறிவித்துள்ளது. 

இதன்படி திருப்பதி, டெல்லி, மும்பை, கொல்கத்தா, துபாய், சிங்கப்பூர் உட்பட புதிதாக 63 வழித்தடங்களை இணைக்கும் சேவைகள் துவங்கப்படுகின்றன. இதற்கான டிக்கெட் முன்பதிவு வரும் ஜனவரி 9 முதல் ஜனவரி 16 தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து துவங்கவுள்ள வழித்தட சேவைகள் போர்ட் பிளேயர் -ராஜமுந்திரி, கொல்கத்தா - ராஜமுந்திரி, ராஜமுந்திரி - சிங்கப்பூர் ஆகியவை ஆகும். அதேபோல் ஐதராபாத் வழியாக சென்னை - ராஜமுந்திரி , பெங்களூரு வழியாக சென்னை- திருப்பதி, பெங்களூரு வழியாக கொச்சி- ராஜமுந்திரி போன்ற சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு விமானநிலையத்தில் இருந்தும், ஐதராபாத்தில் இருந்தும் புதிய வழித்தடங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ தற்போது வரை நாள் ஒன்றுக்கு 900 பயணிகள் விமானத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS