இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 20 காசுகள் உயர்ந்து ரூ.64.39 காசுகளாக உள்ளது. நேற்றைய வர்த்தக்கத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.64.59 காசுகளாக இருந்தது.

1999 ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 32,000 புள்ளிகளை எட்டி உள்ளது உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து, 64.39 ஆக உள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 64.59 ஆக இருந்தது.

POST COMMENTS VIEW COMMENTS