டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று சரிவை சந்தித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு 11 காசு சரிந்து 68 ரூபாய் 57 காசாக உள்ளது. அந்நிய செலவாணி சந்தையில் இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்தது ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமானது. கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாய் 46 காசாக இருந்தது. இந்நிலையில், இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. கடந்தவியாழக்கிழமையன்று 39 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து, மீண்டது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS