மாநிலங்களவைத் எம்.பி தேர்தல் நடைமுறை குறித்த விவரம்..


ராஜ்யசபா எனப்படும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்திற்குள்ள பிரதிநிதித்துவம் குறித்தும் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படும் நடைமுறை குறித்து தெரிந்து கொள்வோம்..

மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து மொத்தம் 18 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒரே நேரத்தில் எம்.பி.க்களை தேர்வுசெய்யாமல், கா‌லியாகும் பதவிகளின் எண்ணிக்கைக்கேற்ப மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும்.

ஒரு மாநிலங்களவை எம்.பியை தேர்வுசெய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போது 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவதால், அந்த பதவிகளுக்கான தேர்தல் நடைபெற ‌இருக்கிறது.

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுப்படி, 89 இடங்களில் வென்ற திமுகவால் மாநிலங்களவைத் தேர்தலில் 2 எம்.பி.க்களை பெற முடியும். 134 இடங்களை கைப்பற்றிய அதிமுகவால் 3 எம்.பி.க்களை எளிதாக பெற முடியும். மீதமுள்ள ஒரு எம்.பி.யை தேர்வுசெய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அதிமுகவிடம் இல்லை. இருப்பினும், அதிக எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட கட்சி என்ற அடிப்படையில் அதிமுகவால் மீதமுள்ள ஒரு எம்.பி. பதவியைப் பெற முடியும்.

POST COMMENTS VIEW COMMENTS