திமுக, அதிமுக பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாது: வைகோ


தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாது என தேமுதிக, தமாகா, மக்கள்நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

சாத்தூரில் மதிமுக வேட்பாளர் ரகுராமனை ஆதரித்துப் பரப்புரை செய்த அவர், தேர்தலில் வாக்களிப்பதற்காக திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார். மதுவிலக்கு விவகாரத்தில் இவ்விரு கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருவதாகக் கூறிய வைகோ, தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். திமுகவோ அல்லது அதிமுகவோ மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் அமைதியற்ற நிலை ஏற்படும் என்று வைகோ அச்சம் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS