ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அதிமுக, திமுக முயற்சிகளை தடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையருக்கு கடிதம்


வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அதிமுக, திமுகவின் முயற்சிகளை தடுக்க வேண்டும் என பாமக சார்பில் தலைமை தேர்தல் ஆணையருக்கு ‌கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அவ்விரு கட்‌சியினரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக பெரும் தொகை பதுக்கப்பட்டிருப்பதாகவும் பாமகவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணம் விநியோகிக்கும் அதிமுக மற்றும் திமுகவின் முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பாமக, மத்திய துணை ராணுவப்படையினர் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் பாமக கேட்டுக்கொண்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS