தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி காணொலி மூலம் ஆலோசனை


தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி காணொலி மூலம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக தலைமை செயலர், உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர், வருமான வரித்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் நசிம் ஜைதி ஆலோசனை மேற்கொண்டார். தமிழக தேர்தல் தேதி நெருங்கிவிட்ட நிலையில், அதற்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பணப் பட்டுவாடாவை தடுக்‌க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தலைமை தேர்தல் ஆணையர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

POST COMMENTS VIEW COMMENTS