சரத்குமார் வாகனத்தில் பறிமுதல் செய்த ரூ.9 லட்சம் பணம் திருப்பித் தரப்படாது: ராஜேஷ் லக்கானி


சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாகனத்தில் இருந்து 9 லட்சம் ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உரிய ஆவணங்களை காட்டினாலும் திருப்பித் தரப்படாது என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் கலந்துரையாடிய அவர், வேட்பாளர் அல்லது நட்சத்திர பேச்சாளர் ஆகியோரின் பணபரிவர்த்தனைகள் 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இருந்தால், காசோலைகள் மூலமாகத்தான் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளதாக கூறினார். எனவே இதுதொடர்பாக, தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர்தான் முடிவெடுப்பார் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS