கோபிசெட்டிபாளையத்தில் கொலுசுகள், வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்


கோபிசெட்டிபாளையம் சட்ட‌ப்பே‌வைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட வெள்ளிக்கொலுசுகள், 12 கிலோ வெள்ளிக்கட்டி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

காசிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மைசூரிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற கர்நாடக அரசுப் பேருந்தில் சோதனை மேற்கொண்டனர்.‌‌‌ உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்து, கோபிசெட்டிப்பாளையம் சார் ஆட்சியரும், தேர்தர் நடத்தும் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னியிடம் ஒப்படைத்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS