கிரானைட்‌ முறைகேடுகளை மூடி மறைக்கவே தங்கள் அதிகாரங்களை திமுக, அதிமுக கட்சிகள் பயன்படுத்தும்: ஜி.ராமகிருஷ்ணன்


தி.மு.க, அ.தி.மு.க காட்டும் மாய்மாலங்களுக்கு தமிழக மக்கள் பலியாகமாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கிரானைட்‌ மற்றும் கனிமவளக் கொள்ளைகள் மிக அதிகமாக நடைபெற்ற காலத்தில், தி.மு.க மத்திய, மாநில ஆட்சிகளிலும், அ.தி.மு.க மாநில அதிகாரத்திலும் இருந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாறி மாறி ஆட்சியிலிருந்தபோது கனிமவளக் கொள்ளையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்கள் தே‌ர்தல் அறிக்கைகளில் மேம்போக்காக இந்த முறைகேடுகள் பற்றி குறிப்பிட்டுள்ளதாக ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால், முறைகேடுகளை மூடி மறைக்கவே அதிகாரங்களை இரு கட்சிகளும் பயன்படுத்தும்‌ என்றும், ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

POST COMMENTS VIEW COMMENTS