பணப்பட்டுவாடாவை அறிமுகம் செய்தது திமுகதான்: வைகோ குற்றச்சாட்டு


வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை முதன்முதலில் திமுக தான் அறிமுகப்படுத்தியதாகவும், பின் அதிமுகவும் அதனைப் பின்பற்றியதாகவும் தேமுதிக, தமாகா, மக்கள்நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

அந்தக் கூட்டணியின் சார்பில் வானூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்துப் வைகோ பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், மதுவிலக்கு விவகாரத்தில் பொய் பேசுவதில் திமுகவும், அதிமுகவும் கூட்டாளிகள் என்று சாடினார். திமுக ஆட்சியில் அதிமுகவினரின் ஆலைகளிலும், அதிமுக ஆட்சியில் திமுகவினரின் ஆலைகளிலும் மது வாங்கப்படுவதாக வைகோ கூறினார். கனிம மணல், ஆற்றுமணல் கொள்ளையை தடுத்தாலே, அரசுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்று பேசிய வைகோ, வாக்களார்களுக்கு பணம் கொடுக்கப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை ‌எடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டினார்.

POST COMMENTS VIEW COMMENTS