இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியாக உள்ளது. நான்கு ஆயிரத்து 578 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில் வேட்பு மனுவை வாபஸ் வாங்க நாளை மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வேட்பு மனுவை திரும்பப் பெற உள்ளனர். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர் என்பது தெரியவரும். இதன் பின்னர் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்தலில் போட்டியிட 7 ஆயிரத்து 149 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், இதில் 2 ஆயிரத்து 571 மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டன.

POST COMMENTS VIEW COMMENTS