ஆர்.கே.நகர் வேட்பாளர்களுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் தேர்தல் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.

தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி, தேர்தல் பார்வையாளர்கள் ஸ்ரீவஸ்தவா, ஷில் ஆஷிஸ் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள், தேர்தல் செலவினம் உள்ளிட்டவைகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைய வழிமுறைகள் குறித்த கையேடு வழங்கப்பட்டது. 

அப்போது கூட்டத்தில் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், வேட்பாளர்கள் வாகன பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறினார். தேர்தல் ஆணைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், மாலை 5 மணிக்கு மேல் வீடுவீடாகச் சென்று பரப்புரை செய்யக்கூடாது என்றும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 59 பேர் போட்டியிடுகின்றனர். 
 

POST COMMENTS VIEW COMMENTS