ஆம்பூரை ம.ம.க.வுக்கு ஒதுக்கியதற்கு திமுகவினர் எதிர்ப்பு


ஆம்பூர் தொகுதியை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டத்தின் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இ‌தற்கு எதிர்ப்பு தெரிவித்து ‌இன்று சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர், 1967 முதல் ஆம்பூர் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கே விட்டு‌க்கொடுப்பதாக கட்சித் தலைமை மீது குற்றஞ்சாட்டினர்.

ஆம்பூர் தொகுதியில் திமுக போட்டியிடாவிட்டால், கூட்டணிக் கட்சி‌ வேட்பாளருக்கு தேர்தல் பணி செய்யப்போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாகவும் திமுகவினர் தெரிவித்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS