கருணாநிதி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கோரினார் வைகோ


திமுக தலைவர் கருணாநிதி குறித்து தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கருணாநிதி குறித்து பேசியதை வாழ்நாளில் செய்த குற்றமாக கருதுவதாக தெரிவித்த வைகோ, தான் சாதிய உணர்வுக்கு அப்பாற்பட்டவன் என்பதை கருணாநிதி அறிவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி குடும்பம் குறித்து மறைமுகமாக சொல்லும் எண்ணம் எதுவும் இல்லை என தெரிவித்த வைகோ, தான் பேசியது தவறாக பொருள்கொள்ளும்படி அமைந்துவிட்டதாகவும் தெரிவித்தார். தவறாக பொருள்கொள்ளும் படி பேசியது மிகப்பெரிய தவறு எனவும் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கருணாநிதிக்கு எதிராக வைகோ அவதூறு பேசியதாக புகார் எழுந்த சூழ்நிலையில் வைகோ தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS