திமுக எக்ஸ்ரே-அதிமுக எக்ஸ்ரே: இமான் அண்ணாச்சி தரும் புதுமையான விளக்கம்


திமுகவினரின் எக்ஸ்ரே மற்றும் அதிமுகவினரின் எக்ஸ்ரேவுக்கு இடையேயான வித்தியாசம் குறித்து இமான் அண்ணாச்சி புதுமையான விளக்கம் ஒன்றினைக் கொடுத்துள்ளார்.

டிவி தொகுப்பாளராக இருந்து காமெடி நடிகராக மாறிய இமான் அண்ணாச்சி, சமீபத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் அவதாரம் எடுத்துள்ளார். திமுகவின் பிரசாரப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இமான் அண்ணாச்சி, திமுகவினரின் எக்ஸ்ரேவுக்கும், அதிமுகவினரின் எக்ஸ்ரேவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து புதுமையான் விளக்கம் ஒன்றினைக் கொடுத்துள்ளார்.

கூட்டத்தில் பேசிய இமான் அண்ணாச்சி, ‘எனது நண்பர் ஒருவர் வைத்துள்ள எக்ஸ்ரே கடைக்குச் சென்ற நான், திமுகவினரின் எக்ஸ்ரேவுக்கும், அதிமுகவினரின் எக்ஸ்ரேவுக்கும் இடையிலான வித்தியாசத்தை பத்தே நிமிடத்தில் கண்டுபிடித்துவிட்டேன் உங்களில் எத்தனை பேருக்கு இது சாத்தியம்’ என்று கூட்டத்தினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.

இதற்கான விளக்கத்தையும் அவரே கொடுக்க, முதுகுத்தண்டு எங்கெல்லாம் நேராக நிற்கிறதோ, அதெல்லாம் திமுகவினரின் எக்ஸ்ரே. கும்பிடுபோட்டு கும்பிடுபோட்டு முதுகுத்தண்டு வளைந்துள்ளதெல்லாம் அதெல்லாம் அதிமுகவினரின் எக்ஸ்ரே என்று புதுமையான விளக்கம் ஒன்றினைக் கொடுத்தார்.

POST COMMENTS VIEW COMMENTS