விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் 11-வது நாளாக ஜெயலலிதா நேர்காணல்


அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் 11-வது நாளாக ‌ வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. காலையில், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, மாலையில் திருவண‌ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பேரவைத்‌தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. முதலமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.

POST COMMENTS VIEW COMMENTS