தேர்தல் பணிகளில் மத்திய அரசுப் பணியாளர்களைப் பயன்படுத்தாதது ஏன்?


கேள்வி:

தேர்தல் பணிகளில் மத்திய அரசுப் பணியாளர்களைப் பயன்படுத்தாதது ஏன்?.. அரசுகள் மாறும்போது மீண்டும் அவர்கள் புதிய அரசின் கீழ் பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கிறேதே... மேலைநாடுகளில் உள்ளதுபோன்ற விகிதாச்சார அடிப்படை நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளனவா?

தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி:

மத்தியிலும் அரசு மாறுகிறதே.. அதனால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் மாநில அரசின் கீழ்வரும் வருவாய் மற்றும் காவல் துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் இரவு,பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் ஓரிருவர் மீது புகார்கள் எழுகின்றனவே தவிர, மற்றபடி 99 சதவீத ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களைப் பின்பற்றி தேர்தலை நடத்தவது எனது பணி, அதனை சிறப்பாக நிறைவேற்ற பாடுபடுவேன்.

கேள்வி: தேர்தலின்போது பாதுகாப்புகாக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். மேலை நாடுகளில் சுயவிருப்பத்துடன் பலர் தேர்தல் பணியாற்றுகிறார்கள். பாதுகாப்புக்காகப் பயனபடுத்தப்படும் வீரர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது ஆரோக்கியமான நடைமுறையா?

ராஜேஷ் லக்கானி:

உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்..எந்த நாட்டில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தேர்தலில் வாக்களிக்கின்றனர். இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கும்பட்சத்தில் உங்களது கேள்விக்கு நான் பதில் அளிக்கிறேன்.

POST COMMENTS VIEW COMMENTS