தேர்தல் குறித்து மொபைல் ஆப் மூலம் புகார்கள் அளிப்பவர்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறீர்கள்?


கேள்வி: தேர்தல் குறித்து மொபைல் ஆப் மூலம் புகார்கள் அளிப்பவர்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறீர்கள்?

தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி:

மொபைல் ஆப் மூலம் புகார் அளிக்க இரண்டுவிதமான நடைமுறைகள் உள்ளன. முதல் நடைமுறையின்படி, உங்களது மொபைல் போன் எண் மற்றும் இமெயில் முகவரி இவற்றைப் கொடுத்து பதிவு செய்து அதன்மூலம் தேர்தல் விதிமீறல் புகார் அளிக்கலாம். இந்த முறை மூலம் புகார் அளித்தவருக்கு அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த பதில் அனுப்பப்படும். புகார் அளித்தவரின் அடையாளம் குறித்த தகவல் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். மற்றொரு முறையில் உங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் நீங்கள் புகார் அளிக்கலாம்.

POST COMMENTS VIEW COMMENTS