வாக்குக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்க வழி ஏதும் இருக்கிறதா?


கேள்வி : பிரசாரத்தின்போது பிற வேட்பாளர்களைத் தரக்குறைவாகப் பேசவும், ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பவும் முனைவோருக்கு என்ன தண்டனை?..

தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி :

வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தேர்தல் ஆணையம் மிகத்தெளிவாக வரையறுத்துள்ளது. பிரசாரத்தின்போது அதனைப் பின்பற்றுமாறு அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன். இதை அவர்கள் மீறும்போது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வழி இருக்கிறது. புள்ளி விபரப்படி 2 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் இருகின்றன.

கேள்வி : தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காலதாமதாம் ஏற்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு உங்களின் பதில் என்ன?....

தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி :

புகார்கள் என்பது வேறு, வழக்குகள் என்பது வேறு. சுவரொட்டிகள், பேனர்கள் போன்ற புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் வழக்குகள் என்றால் அவற்றை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

பெரும்பாலான வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படுவது உள்ளிட்ட விபரங்களைச் சரியான முறையில் பின்தொடர்ந்தாலே 90 சதவீத வழக்குகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கிட்டும். மேலும், பெரும்பாலான புகார்கள் இணையம் சார்ந்த புகார்களாக இருப்பதால், அதற்காக புதிய சாப்ட்வேர் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS