சுயேச்சை வேட்பாளர்களைக் குறைக்க நினைக்கும் உங்களது செயல் ஜனநாயக விரோதப் போக்கு அல்லவா?


கேள்வி:

சுயேட்சை வேட்பாளர்களைக் குறைக்க நினைக்கும் உங்களது செயல் ஜனநாயக விரோதப் போக்கு அல்லவா?

தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி:

சுயேட்சை வேட்பாளர்களைக் குறைக்கும் எண்ணம் ஏதும் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. இதுதொடர்பாக ஆலோசனை ஏதும் நடத்தப்படவில்லை. அதேநேரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகபட்சமாக 63 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் நோட்டா சின்னத்தை சேர்த்தால் 64 சின்னங்கள் மட்டுமே இடம்பெற முடியும்.

மேலும், 4 இயந்திரங்களுக்கு மேல் ஒன்றாக இணைக்க முடியாது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. வேட்பாளர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகரிக்கும் நிலையில் மீண்டும் பழைய முறையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு நாம் செல்ல வேண்டி வரும். இதனால், தேர்தலில் விளம்பரத்துக்காகப் போட்டியிட எண்ணும் ‘நான் சீரியஸ் கேண்டிடேட்ஸ்’ வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்தே ஆலோசிக்கப்படும்.

POST COMMENTS VIEW COMMENTS