பூத் ஸ்லிப் வழங்குவதில் உள்ள இடையூறுகளைக் களைய நீங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன?


கேள்வி:

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் போல 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் எண்ணம் உள்ளதா?.. பூத் ஸ்லிப் வழங்குவதில் உள்ள இடையூறுகளைக் களைய நீங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன?.. பூத் ஸ்லிப்களை மொபைல் மூலமாக அனுப்பும் திட்டம் ஏதும் இருக்கிறதா?...

தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி:

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் போல 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் எண்ணம் இதுவரை இல்லை. பூத் ஸ்லிப்களை மொபைல் போன்களுக்கு பிடிஎப் வடிவில் அனுப்பலாம். பூத் ஸ்லிப் என்றால் அதில் வாக்காளரின் புகைப்படம் இடம்பெற்றிருக்க வேண்டும். பிடிஎப் வடிவில் அனுப்பப்படும் பூத் ஸ்லிப்களில் உள்ள புகைப்படங்களை மாற்றி, அதனை சட்டவிரோதமாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

தற்போது, தேர்தல் ஆணையத்திடம் 2 கோடி பேரின் செல்போன் எண்கள் உள்ளன. அவற்றுக்கு, தங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி குறித்த விவகாரங்கள், வரிசை எண் மற்றும் பாகம் எண் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இருந்தாலும், வாக்குச் சாவடியில் பிரிண்ட் செய்யப்பட்ட வடிவில் இருக்கும் பூத் ஸ்லிப்களை கொடுத்தே வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.

POST COMMENTS VIEW COMMENTS