தனிமனித வழிபாட்டை ஏற்றுக்கொண்டது எப்படி?: கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இல.கணேசன் கேள்வி


தனிமனித வழிபாட்டை விரும்பாத கம்யூனிஸ்ட் கட்சிகள், ‌தேமுதிகவுடனான மக்கள்நலக் கூட்டணியை கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என்று ஏற்றுக்கொண்டது எப்படி என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக, திமுக, பாரதிய ஜனதா கூட்டணி கூட இதுபோன்று தனி மனிதரின் பெயரோடு அழைக்கப்பட்டதில்லை என்று கூறினார். ‌

கொள்கைக்கு முரணான வகையில் தங்களை பாண்டவர்களாக, கம்யூனிஸ்ட்கள் பாவித்துக் கொண்டது குறித்தும் இல.கணேசன் வினவியுள்ளார். அதேபோல் தேமுதிகவுடன் பாரதிய ஜனதா பேரம் பேசியதாக வைகோ கூறிய குற்றச்சாட்டையும் இல.கணேசன் மறுத்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS