ஆறாவது நாளாகத் தொடரும் அதிமுகவின் வேட்பாளர் நேர்காணல்


அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த‌வர்களிடம் ஆறாவது நாளாக இன்றும் நேர்காணல் நடைபெற்றது.

சென்னை போயஸ் தோட்டஇல்லத்தில் முதலமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் விடுப்பட்ட தொகுதிகளுக்கும், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெற்றது.

ஒவ்வொரு தொகுதிகளில் இருந்தும் இரண்டு முதல் மூன்று பேர் என 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.‌ நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS