வைகோ மீது திமுக புகார் மனு


தேர்தல் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் வைகோ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது.

திமுக மீது வைகோ அவதூறு பரப்புவதாக‌வும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. தேமுதிகவிடம் திமுக பேரம் பேசியதாக வைகோ கூறிய கருத்தின் காட்சி தொடர்‌பான குறுந்தகடையும் லக்கானியிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS