வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படம்: தேர்தல் அதிகாரி தகவல்


தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர் புகைப்படமும் சின்னத்துடன் சேர்த்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெறும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவீன கணக்குகளை கையாள வேட்பாளர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லக்கானி, இன்றை கூட்டத்தில் கட்சியினரிடம் தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்பாக பேசப்பட்டதாகவும், அதேபோல எந்த செலவீனம் எல்லாம் தேர்தல் ஆணையத்தால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று விளக்கமளித்ததோடு, ஒவ்வொரு வேட்பாளருக்கும் தேர்தல் செலவீனம் தொடர்பாக பயிற்சி கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். வெள்ளநிவாரணம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒரு சிலருக்கு வங்கிகளிள் போடப்பட்டுள்ளதாக தி.மு.க. அளித்த புகாருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS