பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு?


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் இன்று வெளியாகும் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.‌

பாரதிய ஜனதாவின் நாடாளுமன்‌றக்குழு கூட்டம் தேசியத்தலைவர் அமித் ஷா முன்னிலையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக பாரதிய‌ ஜனதா தலைவர் த‌மிழிசை சவுந்திர ராஜன், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ‌கட்சியின் தமிழக மேலிடப்பொறுப்பாளர் முரளிதர ராவ்,எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான முதல் கட்ட பட்டியல் வெளியாகக்கூடும் என்று கூறப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS