கருணாநிதி-ஆசாத் சந்திப்பு: தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை


திமுகவுடனான தொகுதிப்பங்கீடு குறித்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியை, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் குலாம்நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் சந்தித்து ‌பேசினர்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்‌களிடம் பேசிய ஆ‌சாத், திமுக தலைவர் கருணாநிதியுடன் தேர்தல் வியூகம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்ப‌ட்டதாக கூறினார். தொகுதிப்‌ பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் எத்தனை தொகுதிகள் என்பது‌ இறுதி செய்யப்படவில்லை என்றும் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். அடுத்தடுத்தடுத்த சந்திப்புகளின் போது தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

POST COMMENTS VIEW COMMENTS