கூட்டணி தொடர்பாக பாஜக மற்றும் ஐஜேகே இடையே முக்கிய பேச்சுவார்த்தை


தமிழ‌க சட்டமன்றத் தேர்த‌‌ல் கூட்டணி தொடர்பாக, பாரதிய ஜனதா மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் ‌இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், பாரதிய ஜனதா தரப்பில் அதன் தமிழக பொறுப்பாளர் முரளீதர்ராவ், பொதுச்செயலாளர் மோகன்ராஜுலு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் ‌பங்கேற்றனர்.

இந்திய ஜனநாயகக் கட்சி ‌தரப்பில் அதன் செயல் தலைவர் ரவிபச்சமுத்து, மாநிலத் தலைவர் கோவைதம்பி, ‌பொதுச் செயலாளர் ஜெயசீலன், அமைப்புச் செயலாளர் வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பேச்சு நடத்தினர்.

POST COMMENTS VIEW COMMENTS