திருப்பத்தூர் தொகுதியின் வேட்பாளர் யார்?: தொண்டர்களால் பேசப்படும் பெயர்கள்..


தமிழக சட்ட‌ப்பேரவை தேர்தலுக்கான, பரப்புரைக் கூட்டங்கள், கூட்டணி குறித்த நகர்வுகள் களைகட்ட ஆரம்பித்திருக்கும் இந்த தருணத்தில், ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு கட்சியின் சார்பாக போட்டியிடுபவர் யார் என்ற‌ கேள்வி அனைவர் முன்பும் எழுந்துள்ளது.

இந்த வகையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளர் யார் என தொண்டர்கள் பேசிக்கொள்வதை புதிய தலைமுறை பதிவு செய்கிறது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக சார்பில், கட்சியின் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான டிடி.குமார், கால்நடை மருத்துவரும், திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவருமான திருப்பதி, தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், கந்திலி ஒன்றியச் செயலாளருமான கே.ஜி.ரமேஷ் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராகும் வாய்ப்பிருப்பதாக தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

திமுக சார்பில், கட்சியின் திருப்பத்தூர் நகரச் செயலாளரும், கடந்த தேர்தலில் போட்டியிட்டவருமான ராஜேந்திரன், கட்சியின் ஒன்றியச் செயலாளரும், கட்சியின் தேர்தல் தலைமை முகவராக செயல்படுபவருமான நல்லதம்பி, கட்சியின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளர் ஆகக்கூடும் எனத் தெரிகிறது.

தேமுதிக சார்பில், கட்சியின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஹரிகிருஷ்ணன், கட்சியின் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் செந்தில்குமார், கட்சியின் திருப்பத்தூர் நகரச் செயலாளர் ராஜா ஆகியோரில் ஒருவர் வேட்பாளராகும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மக்கள் நலக் கூட்டணியின் சார்பில், மதிமுகவிற்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால், அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினரும், திருப்பத்தூர் ஒன்றியச் செயலாளருமான காளிலிங்கன், வேலூர் மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இமயவர்மன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், அக்கட்சியின் வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராகும் வாய்ப்பிருப்பதாக, தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS