தேர்தல் புகார் மீது ஒரே நாளில் நடவடிக்கை: ராஜேஷ் லக்கானி தகவல்


தேர்தல் விதிமீறல் புகார்‌கள் மீது ஒரே நாளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தலை‌மைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 3 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றில‌ 95 சதவிகித புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக வாக்குப்பதிவு செய்வதற்கான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பொதுமக்கள் மற்றும் விபாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, உரிய ஆவணங்களை சமர்ப்பித்த உடன் திருப்பிக்கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS