தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸில் 8 பேர் கொண்ட குழு அமைப்பு


காங்கிரஸ் கட்சியில் தொகுதிப் பங்கீடு பற்றி பேச குழு 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், 8 பேர் கொண்ட குழு, திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவித்துள்ளார்.

இக்குழுவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கோபிநாத், ‌‌தங்க‌பாலு, திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன், கிருஷ்ணசாமி, யசோதா, சண்முகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவு செய்யும் இந்த குழு, அதுபற்றி திமுகவுடன் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS