உள்ளாட்சித் தேர்தல் ரத்து: அடுத்தகட்ட நகர்வு?


உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்

நீதிமன்ற உத்தரவையடுத்து, தேர்தல் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்ப‌டுவதாக தமிழக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, அடுத்த அறிவிப்பு வரும் வரை மேற்கொள்ளப்படாது.

மனுக்களோடு சமர்பிக்கப்பட்ட வைப்புத்தொகை குறித்த அறிவிப்புகள் ஓரிரு தினங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. அரசு தரப்பில் மேல்முறையீடு செய்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் உத்தரவு பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS