உள்ளாட்சி தேர்தல் ரத்து குறித்து தலைவர்கள் கருத்து


தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் தேர்தல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறி தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை ரத்து செய்த உயர்நீதிமன்றம், தேர்தலையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஜனநாயக மாண்பைக்காப்பதற்கான உத்தரவு எனவும் அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.

* உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கதக்கது. தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த நீதிமன்ற உத்தரவு வழிவகுக்கும்: திமுக தலைவர் கருணாநிதி

* திமுகவின் நியாயமான கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது, தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு தரவில்லை:திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி

* தேர்தலுக்கான கால அவகாசம் குறைவாக இருந்தது, உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நல்ல வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்துவதற்கும், இடஒதுக்கீடு முறையை சரியாக பின்பற்றுவதற்கும் உதவியாக இருக்கும்: பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

* தேர்தல் ரத்தால் அரசு பணம் வீணானதற்கு அரசே காரணம்: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

* உள்ளாட்சி தேர்தல் ரத்துக்கு தேர்தல் ஆணையமே முழுப்பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தலை முறையாக கால அவகாசத்தோடு ஜனநாயாக முறையில் நடத்த வேண்டும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

* சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் செய்த தவறுகள் சரி செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, இத்தீர்ப்பை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையமோ, தமிழக அரசோ மேல்முறையீடு செய்யக் கூடாது. தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்: பாமக அறிக்கை

* ஜனநாயகமற்ற இந்த தேர்தல் நடைமுறைகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கதக்கது: விசிக தலைவர் திருமாவளவன்

* உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஜனநாயக மாண்பைக் காக்கும் தீர்ப்பு: வி.சி.க-வின் ரவிக்குமார்
* உயர்நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தீர்ப்புக்கு அரசோ, தேர்தல் ஆணையமோ மேல்முறையீடு செய்யுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்: அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன்

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS