தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 4.97 லட்சம் பேர் வேட்பு மனு தாக்கல்: கடைசி நாளான நேற்று 2.45 லட்சம் பேர் மனுதாக்கல்


உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 12 மாநகராட்சிகளின் மண்டல அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பரிசீலனை ‌நடைபெறுகிறது. அதேபோல, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் வேட்புமனுக்கள் பெறப்பட்ட அலுவலகங்களில் பரிசீலனை நடைபெற்று வருகிறது. தாக்கல் செய்யப்பட்ட ‌வேட்புமனுக்களை உதவி தேர்த‌ல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர். ஏற்றுக்கொள்ளப்படும் வேட்பு மனுக்கள், ‌‌நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களின் விவரங்க‌ள் இன்று மாலை 5 மணியளவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 4,97,840 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள 12 மாநகரட்சிகளில் உறுப்பினர்களாக போட்டியிட 9,586 மனு தாக்கல் செய்துள்ளனர்.இதேபோல நகராட்சி உறுப்பினர்களாக போட்டியிட 20,742 மனு தாக்கல் செய்துள்ளனர்.வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று 2,45,802 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசிலனை இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெறும் நாளாக அக்.6 ஆம் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அன்று மாலை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும்

இதற்கிடையே, மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது‌. அதில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் பங்‌கேற்றுள்ளன. மாநில தேர்தல் ஆணைய‌ர் சீதாராமன் அனைத்துக் கட்சிகளுடனும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

POST COMMENTS VIEW COMMENTS