எந்த அடிப்படையில் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன?: விரிவான விளக்கம்


தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ளது. எந்த அடிப்படையில் வேட்புமனுக்கள் ஏற்கப்படுகின்றன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட அலுவலகங்களில், உதவி தேர்தல் அலுவலர் தலைமையிலான குழுவினர் வேட்புமனு பரிசீலனையில் ஈடுபடுகின்றனர். முன்மொழிந்தவர், உதவியவர் என 2 பேர் வேட்புமனு பரிசீலனையின்போது வேட்பாளருடன் இருக்கலாம். வேட்புமனு தாக்கல் செய்த தேதி அடிப்படையில் வேட்பாளர்கள் அழைக்கப்படுவர்.

உள்ளாட்சித் ‌தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த நபர் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அவர் இரட்டை வாக்குரிமை பெற்றவராக இருக்கக் கூடாது. வேட்பாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடாது என்ற விதி உள்ளது. மேலும், தேர்தலில் போட்டியிடும் நபர் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டவராக இருக்கக் கூடாது.

வேட்பாளர் போட்டியிடும் வார்டுக்கு உட்பட்ட, வாக்காளர்‌‌ பட்டியலில் அவரை முன்மொழிந்தவரின் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும். உரிய இடங்களில் கையொப்பமிட்டிருக்க வேண்டும். மேலும், வேட்பாளரின் ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானதாக இருக்க வேண்டியது அவசியம். இதன் அடிப்படையில், வேட்புமனுக்களை தேர்தல் அலுவலர்கள் பரிசீலனை செய்கின்றனர். அவற்றில் ஏதேனும் ஒன்று முறையாக இல்லை என்றாலும் வேட்புமனு நிராகரிக்கப்படும்.

POST COMMENTS VIEW COMMENTS