இன்று இவர்: விடுதலைக்கு பின் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது இஸ்மாயில்


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். 88 வயதான இவர், நாடு விடுதலையடைந்து சில ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்.

எந்த அரசியல் கட்சியையும் சாராத சூழலில், வழக்கறிஞர் பட்டப்படிப்பை முடிந்திருந்த முகமது இஸ்மாயில், குளச்சல் நகராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு மக்களின் ஆதரவால் வெற்றி பெற்றிருக்கிறார்.

1959ஆம் ஆண்டில் மீண்டும் போட்டியிட்டு கவுன்சிலராக இருந்துள்ள இவர், 1980 ஆம் ஆண்டில் பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அப்போது தான் மேற்கொண்ட பணிகளை நினைத்து இப்போதும் மகிழ்ச்சியடைவதாக கூறுகிறார் முன்னால் எம்.எல்.ஏ. முகமது இஸ்மாயில்.

பல ஆண்டுகளுக்கு முன் உள்ளாட்சி அமைப்பில் பொறுப்பு வகித்தபோதே குளச்சல் துறைமுகத் திட்டத்திற்கு தாம் குரல் கொடுத்ததாக கூறும் முகமது இஸ்மாயில், தற்போது மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்துவருகிறார்.

POST COMMENTS VIEW COMMENTS