உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது


உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் அவற்றின் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

சென்னை உட்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அளவி‌ல் போட்டியிடும் வேட்பாளர்கள் முனைப்புடன் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இறுதி நாளன்று ஒருலட்சத்திற்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை கண்காணிக்க 27 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும், 8 மாவட்ட வருவாய் அலுவலர்களையும் தேர்தல் பொதுப் பார்வையாளர்களாக மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர்கள் அனைவரும் ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு சென்று தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, உள்‌‌ளாட்சி தேர்தல் குறித்து இன்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்த உள்‌ளதாக தேர்தல் ஆணையர் சீதாராமன் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS