உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு: மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கிறது


தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

சென்னை உட்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அளவி‌ல் போட்டியிடும் வேட்பாளர்கள், இறுதி நாளான இன்று முனைப்புடன் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் தருணத்தில் வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவரும் வரிசையில் நின்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தமிழகம் முழுவதுமுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 26ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 26ஆம் தேதியே வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (அக்டோபர் 3) முடிந்தது.

POST COMMENTS VIEW COMMENTS