உள்ளாட்சி தேர்தல்: விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு


தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் நலக் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதையடுத்து, சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் பட்டியலை அதன் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.

இதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சென்னை மாநகராட்சியில் 40 வார்டுகளிலும், தூத்துக்குடியில் 3 வார்டுகளிலும், மதுரையில் 14 வார்டுகளிலும், திருச்சியில் 8 வார்டுகளிலும் போட்டியிடுவதாகவும் அதற்கான வேட்பாளர்களையும் திருமாவளவன் அறிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS