தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை.. திமுக கோரிக்கை நிராகரிப்பு


தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள, உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்தும் வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திமுக-வின் இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS