உள்ளாட்சி தேர்தல்: தமாகா-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே.வாசன்


உள்ளாட்சித் தேர்தலில் ‌தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மாநகராட்சி உறுப்பினர்களுக்கான 169 பேர் கொண்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் சென்னையில் வெளியிட்டார். அதன்படி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் 3 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என வாசன் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS