அரக்கோணம் தாலுகாவில் 110 பேர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை


வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில், கடந்த உள்ளாட்சித் தேர்தல் செலவின கணக்கை தாக்கல்‌ செய்யாத 110 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிட முடியாத ‌நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் தெரிய வந்துள்ளதால் அரசியல் கட்சி பிரமுகர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

கடந்த முறை செலவினக் கணக்கை முறையாக தாக்கல்‌ செய்ததாக கூறும் அவர்கள், அதிகாரிகள் ‌அவற்றை முறையாக தமிழக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

தேர்தல் செலவினக் கணக்கை தாக்கல் ‌செய்ததற்கான ஆதாரங்கள் இல்லாததால், அவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. ஆகையால், 13 கிராமங்களைச் சேர்ந்த 110 பேரும், தங்களது குடும்பத்தினரை தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS