உள்ளாட்சி தேர்தல்: தேமுதிக தனித்து போட்டி?


உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசை தொடர்ந்து, தேமுதிகவும் தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, தேமுதி‌க தலைவர் விஜயகாந்த், கட்சியின் மாவட்ட செயலாளர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். எந்தக் கட்சியுடனும் கூட்டணி இறுதியாகாத நிலையில், தனித்துப் போட்டியிடுவதென்று விஜயகாந்த் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. தேர்தலை எதிர்கொள்ள வசதியாக, மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து, மக்கள்நலக் கூட்டணியுடன் மீண்டும் கூட்டணி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது, மக்கள்நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள 4 கட்சிகள் மட்டுமே தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருக்கிறது.

POST COMMENTS VIEW COMMENTS