உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்


உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில்‌ போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் மனு தாக்கல் செய்தனர்.

சென்னை மாநகராட்சியில் 200 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும் அதிமுக-வினர் மனுத்தாக்கல் செய்தனர். சென்னை மேயர் பதவிக்கான பந்தய பட்டியலில் இருக்கும் முன்னாள் எம்பி பாலகங்கா, திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி பிரபாகர், அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். திருச்சியில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானும், சேலத்தில் மேயர் சவுண்டப்பனும் மனு தாக்கல் செய்தனர்.

மதுரையில் மேயர் பதவிக்கான பந்தய பட்டியலில் இருக்கும் கவுன்சிலர்கள் லட்சுமி ராஜகோபால், சண்முகப்ரியா, சுகந்தி அசோக், சணமுக வள்ளி, கண்ணகி பாஸ்கரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். நெல்லையில் பியூலா ‌சத்திய நேத்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

POST COMMENTS VIEW COMMENTS