உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தனித்து போட்டி: ஜி.கே.வாசன் அறிவிப்பு


உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஏற்கனவே கட்சியினரிடம் இருந்து பெறப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அதற்கான ஆலோசனைகள் நடைபெறுவதாகவும் வாசன் கூறியுள்ளார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்று அரசியலுக்கான அணியில் இணைந்தபோதிலும், போதிய அவகாசம் இல்லாததால் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வாசன், வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS