உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம்: தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு


காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்றுமுதல் மனுக்களை அளிக்கலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் மனுக்களை பெறுவதற்கு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி உறுப்பினருக்கு போட்டியிட விரும்பும் பொதுப்பிரிவினர் 2 ஆயிரம் ரூபாயும், பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மற்ற பதவிகளுக்கான விருப்ப மனு கட்டண விவரங்களையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS