அரசு பள்ளி மா‌ணவர்கள் 4 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் வாய்ப்பு


நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

நீட் எனப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் இருக்கும் 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 447 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அரசு பள்ளிகளில் படித்த 4 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் வாய்ப்பு கி‌டைத்துள்ளது. கடந்த ஆண்டு 2 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்த நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

2016-ஆம் ஆண்டு நீட் தேர்வு இல்லாமல் 12-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடந்த போது அரசு பள்ளியில் பயின்ற 30 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை வெறும் 4ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 26 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS