வேலை தேடும் இன்ஜினியரா நீங்கள்..? சப்-இன்ஸ்பெக்டராக வாய்ப்பு


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் சார்பு ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், தமிழகத்தில் காவலர்களுக்கான தேர்வினை நடத்தி தகுதிவாய்ந்த நபர்களை தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக உள்ள 309 சார்பு ஆய்வாளர்கள் (Technical SI) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் 10.08.2018.

விண்ணப்பம் செய்பவர்களுக்கு உதவ ஏதுவாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் மாநகரத்தில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும், மற்றும் மாவட்டங்களிலுள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலங்களிலும் உதவி மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவிமைய தொலைபேசி எண்கள்..

1. 044-40016200
2.044-28413658
3.9499008445
4.9176243899
5.9789035725

கல்வித் தகுதி:
குறைந்தபட்டசம் எலக்ட்ரானிக்ஸ் @ கம்யூனிகேஷனில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷனில்  பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:
36,900- 1,16,600

மேலும் விவரங்களுக்கு http://www.tnusrbonline.org/SI%20(Tech)%20Notification.pdf என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

POST COMMENTS VIEW COMMENTS