பல துறைகளில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்


SJVN நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர் வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் மினி ரத்னா நிறுவனமான SJVN நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில்டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

                            

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.7.2018

விவரங்களுக்கு: http://sjvn.nic.in/writereaddata/Portal/Job/32_1/1_EngJEJO.pdf

ரிசர்வ் வங்கியில் 127 அதிகாரி வேலை

ரிசர்வ் வங்கியில் அதிகாரி (GRADE-B) GENERAL பணியில் சேர விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். (30) வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.7.2018

விவரங்களுக்கு: https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx

மினரல் எக்ஸ்ப்ளரேஷன் கார்பரேஷன் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை 

மினரல் எக்ஸ்ப்ளரேஷன் கார்பரேஷன் நிறுவனத்தில் டெக்னீசியன் பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக், சர்வே, எலெக்ட்ரிக்கல், மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக் ஆகிய பாடப்பிரிவுகளில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.8.2018

விவரங்களுக்கு; www.mecl.co.in

சென்னை ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டியில் 147 ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை. 

சென்னையில் இயங்கி வரும் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் ஜூனியர் அசிஸ்டெண்ட் பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், ஃபயர் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ அல்லது பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக அல்லது இலகுரக வாகனங்களுக்கான ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.7.2018

விவரங்களுக்கு: https://www.aai.aero

ராஷ்ட்ரியா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சி 

ராஷ்ட்ரியா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் கெமிக்கல் பிரிவில் டிப்ளமோ அல்லது வேதியியல் பிரிவில் பி.எஸ்.சி படித்திருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.7.2018

விவரங்களுக்கு: http://203.199.79.251:3054/Uploads/OPT_Final_Adv.pdf

POST COMMENTS VIEW COMMENTS